பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகை பணம் கொள்ளையடித்தவனுக்கு மரண தண்டனை..!
மேற்கு வங்கத்தில் பிருதுவான் மாவட்டத்தில் சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் என்ற இந்த நபர் டிப் டாப் உடை அணிந்து அரசு அதிகாரி போல் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து வீட்டில் நுழைந்ததும் சைக்கிள் செயினால் பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளை அடிப்பான். பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அவன் கைது செய்யப்பட்டான். இவன் மீது கொலை பாலியல் வன்முறை என ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த நிலையில் அவனுக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.







