--- --:--:-- --

விவசாய தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் கைது..!

4

விவசாய தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயன்றதாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் சிங்கூர் எனுமிடத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

வரும் 26ஆம் தேதி திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை நடத்த உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் ஒருவரை பிடித்து விவசாயிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் 4 விவசாய தலைவர்களை கொல்லத் திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon