--- --:--:-- --

பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய நபர் கைது!

10

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார். அந்த வகையில் பரமக்குடியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முகநூலில் இருந்து திருடிய மர்ம ஆசாமி ஒருவன் அதனை ஆபாச படமாக மார்பிங் செய்து கணவனுக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

 

இதுகுறித்து தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் தருவதாக கூறி பணம் கேட்ட நபரை போலீஸார் பொறி வைத்து வளைத்துப் பிடித்துள்ளனர். விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் பரமக்குடி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

 

முகநூலில் குடும்பப் பெண்களின் படங்களை தேடி எடுத்து அவற்றை மார்பிங் செய்து பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சென்னை புதுபாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது புகைப்படத்தை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து அவரது கணவருக்கு படத்தை அனுப்பி தனது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தச் சொல்லி மிரட்டியுள்ளார்.

 

பணம் செலுத்த மறுத்தால் சமூக வலைத்தளத்தில் மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்டு விடுவதாக பிளாக்மெயில் செய்துள்ளான். வங்கி கணக்கு எண்ணை வைத்து அதில் ராமநாதபுரம் மாவட்டம் என்பதை கண்டறிந்து எஸ்பி வருண்குமாரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

 

வங்கி கணக்கை வைத்து துப்பு துலக்கிய போலீசார் சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த உச்சிப்புளியில் சேர்ந்த சிவக்குமார் என்பவர் அதிரடியாக கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்போது அதிக அளவில் நடப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

குடும்பப் பெண்கள் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நலம் என்றும் இல்லையெனில் வில்லங்கம் எப்போது வேண்டுமானாலும் வீடு தேடி வரலாம் என்று எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

Leave a Reply

Right Menu Icon