மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
மயிலாடுதுறை அருகே மனைவியின் தங்கையான சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இடக்கி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி உடல் நலம் இல்லாததால் மருத்துவ பரிசோதனை செய்தபோது 5 மாதம் கர்ப்பம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் கொரொனா ஊரடங்கின் போது வீட்டில் வந்து தங்கிய சகோதரியின் கணவன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியதன் பேரில் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.







