மெரினா கடற்கரையில் குளிக்கும்போது மாயமான 3 இளைஞர்கள்..!
சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கும்போது மாயமான இளைஞர்கள் 3 பேரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரையில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் மெரினா கடற்கரைக்கு 6 இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர்.
அண்ணா சமாதி பின்புறமாக இருக்கக்கூடிய கடல்பகுதியில் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மூன்று பேர் கடலுக்குள் சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் மற்றவர்கள் மூவரும் அவர்களை தேடியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கும் பொழுது மூன்று இளைஞர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






