சொகுசு பேருந்து- அரசுப்பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து..!
சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் கிரேன் உதவியுடன் பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.





