தமிழகத்தில் 5 மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரொனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கோவையில் தினமும் 500 முதல் 600 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தற்போது வரை 139 பேர் மட்டுமே கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் ஈரோட்டில் தினமும் 200 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 72 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் இரண்டு பேர் மட்டுமே. சிகிச்சையில் உள்ளனர் நாமக்கல்லில் தினமும் 150 முதல் 200 பேருக்குகொரொனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 77 பேருக்கு மட்டுமேகொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் மட்டுமே கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூரில் தினமும் 250 முதல் 300 நபர்களுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது வரை 114 பேருக்குக் கொரொனா உறுதி செய்யப்பட்டது. அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால் சேலத்தில் நாளொன்றுக்கு 300 முதல் 400 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது.






