கொரோனா பிடியில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு!
சென்னையில் கொரொனா சிகிச்சை முடிந்து ஆயுதப்படை காவலர்கள் 62 பேர் இன்று பணிக்கு திரும்பினார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூங்கொத்து மற்றும் சான்றிதழ் கொடுத்து மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களை வரவேற்றார்.
முன்னதாக பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள் சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பினர். அவர்களை திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.






