--- --:--:-- --

அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

12

தென்மேற்கு பருவக்காற்று வெப்பச் சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர், தேவாலா, பொன்னமராவதியில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

ஜூன் 19 முதல் 23 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon