--- --:--:-- --

19 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் 8 மாநிலங்களில் நடைபெற்றது!

10

19 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் நடைபெற்றது. மாநிலங்களவைக்கு ஆந்திரா மற்றும் குஜராத்தில் தலா 4 உறுப்பினர்களையும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மூன்று உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

 

ஜார்கண்டில் இரு இடங்களும், மிசோரம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் தலா ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்காக வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

போராட்டத்திற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டன. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் ஆகியோர் போபாலில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

 

குஜராத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்று இருந்த பாஜக எம்எல்ஏ செசாங் பாய் அவசர ஊர்தியில் வந்து வழியனுப்பினார். வாக்களிக்கும் முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon