சென்னையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்..!
சென்னைக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் சுமார் 298 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இதன் எதிரொலியாக சென்னையில் திருவான்மியூர், அடையாறு, தியாகராயநகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக உளவியல் ஆய்வு மையத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







