கம்பி வேலியில் பல்லால் சிக்கிய சிறுத்தை…!
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிக்குள் வாழும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைகின்றன. இதனால் அருகே உள்ள கிராம பகுதிக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு தான் உதகை அருகே குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மட்டகண்டி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலத்திற்கு பாதுகாப்பாக கம்பி வேலி அமைத்து உள்ளனர்.
அங்கு வனப்பகுதியிலிருந்து பெண் சிறுத்தை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி அந்த பகுதிக்கு வந்து கம்பி வேலியை தாண்டி அப்போது சிறுத்தையின் இரண்டு பற்கள் கம்பி வேலியில் சிக்கி கொண்டது. சிறுத்தையின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.







