--- --:--:-- --

கொடைக்கானல் வருவோர் கவனத்திற்கு அபராதம் உறுதி..!

7

கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருபவருக்கு இன்று முதல் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுவர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனை அமல்படுத்தும் விதமாக நகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருபவருக்கு 20 ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர்.

 

நடைமுறை தொடங்கிய முதல் நாளிலேயே இதுவரை ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருபதாயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon