மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு..!
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம்போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்புவின் கணக்கை 1.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் ப்ரோஃபைல் படங்களை மாற்றியதோடு இதற்கு முன்பிருந்த பதிவுகளையும் அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை குஷ்பு மூன்று நாட்களாக தனது கணக்கை பயன்படுத்த இயலவில்லை எனவும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.






