--- --:--:-- --

காவலரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ள திருநங்கை..!

1

காவலர் ஒருவரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் பணிபுரியும் திருநங்கை புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் உணவு வாங்குவதற்காக உணவகம் சென்ற போது அங்கு வந்த மூவர் தகாத வார்த்தைகளை பேசி பிரச்சினையை செய்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர் தான் காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி எச்சரித்துள்ளார்.

 

அப்போது தானும் அமைந்தகரை காவல் நிலையத்தில் பணியாற்றுவதாக கூறிய அந்த நபர் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையில் அமைந்தகரை காவல்நிலைய குற்ற பிரிவு காவலர் கணேசன் என்பவர் பிரச்சினையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon