--- --:--:-- --

முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தை..!

3

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தையை காப்பாற்ற நிதி உதவி வேண்டி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

ரூபா, யுவராஜ் தம்பதியின் 7 மாத ஆண் குழந்தைகளில் கை கால்களில் அசைவு இல்லாததால் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைக்கு மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் குழந்தைக்கு அரியவகை மரபியல் நோயான முதுகெலும்பு தசைநார் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

 

மூச்சு விடவும் சிரமப்படும் குழந்தைக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கா விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளது. இந்த நோய்க்கு வெளிநாட்டிலிருந்து மருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி செய்ய வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon