--- --:--:-- --

கொரொனா தடுப்பூசியை போட்டுக்க்க் கொண்டு உள்ளார் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்..!

1

டிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார். கொரொனா தடுப்பூசியானது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

 

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் அண்மையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

 

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனும் பிரபல நடிகருமான கமலஹாசன் அவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும், எந்தவித அச்சமும் இல்லாமல் பயமும் இல்லாமல் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

திரைப்பிரபலங்கள் கமலஹாசனை உதாரணமாக கருதி அனைத்து திரைப்பிரபலங்களும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon