100 மில்லியன் பாலோயர்களை கடந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகில் மட்டுமல்ல சமூக வலைதள உலகிலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் இல்லாத அளவுக்கு 10 கோடி பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டா கிராமில் 10 கோடி பேரை பாலோயர்களாக கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
உலக அளவிலான விளையாட்டு வீரர்களில் கால்பந்து வீரர் ரொனால்டோ 26 கோடி பேருடன் முதலிடத்திலும், கால்பந்து வீரர் மெஸ்சி, டேவர் தலா 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட்கோலி 4-வது இடத்தில் உள்ளார்.
இன்ஸ்டாகிராம் தவிர ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விராட் கோலிக்கு அதிக அளவில் பாலோயர்கள் உள்ளனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் விராட்கோலி அடுத்தபடியாக நடிகர் பிரியங்கா சோப்ராவை 6 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






