தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5890 பேருக்கு தொற்று பாதிப்பு… உயிரிழந்தோர் 120 பேர்…! சென்னையில் குறைந்தபாடில்லை!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,89 0பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பும் 120 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் நிலவரம் கடந்த 3 வாரங்களாகவே ஒரே சீராக 6 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் 4 நாட்களாக தினசரி நூறைத் தாண்டி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5890 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4வது நாளாக இன்றும் ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவாகியுள்ளது இன்று மட்டும் 1,185 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,667ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,83,937ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் உயிரிழந்த நிலையில் இது வரையிலான மொத்த பலி எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1185 பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில் மொத்த எண்ணிக்கை 1,17,839 ஆக உயர்ந்துள்ளது. இது வரை, தமிழகம் முழுவதும் இதுவரை 36,47,582 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 65,643 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 393 பேருக்கும், கடலூர் 389, திருவள்ளுர் 308, தேனி 279, சேலம் 266 என மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







