ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற முகக்கவசம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிர் இறந்ததாக கூறப்படும் வியாபாரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற வாசகம் கொண்ட முக கவசத்தை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
உயிரிழந்த வியாபாரிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற புதுமுக கவசத்தை வியாபாரம் செய்து வருகின்றனர்.






