தலீபான் ஆட்சியில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்..!
ஆப்கானின் முன்னாள் அரசு பணியாளரான கபீர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்பொழுது தெருவோரத்தில் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
முகமது பல ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலையும் வருமானமும் இல்லாததால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.






