பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!
தமிழ்நாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மலை பகுதிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தயங்குவதால் மலையின் மேல் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






