அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்..!
ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் அண்ணாமலையிடம் பெண் பத்திரிகையாளர் நெறி தவறிய கேள்வி எதையும் கேட்கவில்லை என்றும் அவர் கேட்ட கேள்வியில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதுவரை சந்தித்ததில்லை என்றும் ஊடக நிறுவனங்கள் இனியும் மௌனம் காக்காமல் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதைப்போல் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது அரசியல் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு என்றும் அந்த பண்பு அண்ணாமலைக்கு இல்லை என்பது இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளில் தெரிவதாக விமர்சித்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக பத்திரிக்கை துறையில் குழல் குரல்வளையை நசுக்க நினைக்கும் செயலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, சீமான் ஆகிய இருவரையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





