--- --:--:-- --

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி இலக்கை நெருங்குகிறாரா ஜோ பைடன்..!

7

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார். உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது.

 

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன் 264 தேர்வாளர்களின் வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

பெரும்பான்மைக்கு மேலும் 6 தேர்வாளர்களின் வாக்குகளை மட்டுமே பைடன் பெற வேண்டி உள்ளது. இதனால் பைடனின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

 

வாக்கு எண்ணிக்கை சட்டப்படி நடந்தால் தான் எளிதாக வெல்வேன் என கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் சதி நடப்பதாக மீண்டும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Right Menu Icon