--- --:--:-- --

முன்கள பணியாளர் இறந்தால் குடும்பத்தாருக்கு வேலை வாய்ப்பு..!

9

கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் விதிக்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

 

முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது என்றும் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இது கொள்கை முடிவு என்பதால் அரசுதான் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon