தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை நாடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையிலுள்ள நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் எனவும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள் வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தொலைபேசி மூலம் தொலைபேசியில் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கலாம்.







