ஜேசிபி வாகனத்தின் டயர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!
சத்தீஷ்கர் மாநிலத்தில் ஜேசிபி வாகனத்தின் டயர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் பிஜேபி வாகனத்தின் டயரில் காற்று நிரப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக டயர் வெடித்து சிதறியதில் இருவர் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





