நிலவில் கால் பதித்த ஜப்பான்.. வெற்றிகரமாக தர இறங்கிய விண்கலம்..!
ஜப்பான் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் மூலம் கால் பதித்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜப்பான் தனது ஸ்மார்ட் லேண்ட் எனும் விண்கலத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நிலவுக்கு அனுப்பியது. நேற்று நள்ளிரவு 12 மணி 20 நிமிடங்களில் நிலவில் தரையிறக்கப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தர இறங்கினாலும் அதனால் சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்ய முடியாது என்றும் சூரிய மின்தகடுகள் சரியான திசையில் பொருத்தப்படவில்லை என்றும் ஜப்பான் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் விண்கலம் தரையிறங்கும் கடைசி டிக் டிக் நிமிடத்தில் அனைத்து விஞ்ஞானிகளும் பொதுமக்களும், விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை அறிந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.





