அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை..!
அமெரிக்கா அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறையின் அமைச்சர் டோனி பிலிங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஹாஸ்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்ஸ் அலவந்த் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.
கொரொனா தடுப்பூசி உற்பத்தி, குவாட் அமைப்பு வலுப்படுத்துதல், பொருளாதார பாதுகாப்பு விவகாரங்கள் என பல அம்சங்கள் தொடர்பாக ஜெய்சங்கர் பேசுவார் என தெரிகிறது. இது தவிர அமெரிக்க தொழில் அதிபர்களையும் இந்த பயணத்தின்போது ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.






