--- --:--:-- --

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவது குறித்து நாளை ஆலோசனை..!

3

ருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாளை சென்னையில் தலைசிறந்த மருத்துவக் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

.நெல்லை மாவட்டத்தில் கொரொனா சிகிச்சை குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அவர் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

 

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிகிச்சை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

Leave a Reply

Right Menu Icon