--- --:--:-- --

அதிமுக கூட்டணியை உறுதி செய்த ஜெகன்மூர்த்தி..!

1

திமுக கூட்டணியில் தொடர முடிவு செய்து, ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்வதாகவும் கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் விவரங்களை 25-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த வகையில், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 

தொகுதி அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி, “நாங்கள் எதிர்பார்த்தது வேறு, இங்கு நடந்தது வேறு. அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

 

இந்த சூழலில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மூர்த்தி, “அதிமுக கூட்டணியில், புரட்சி பாரதம் தொடர்ச்சியாக நீடித்து வருகிறோம். புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியுள்ளார்கள். ஏற்கனவே வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

 

“முன்னதாக எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஒரு சிலர் கூடுதல் இடம் வேண்டுமென்று கேட்டார்கள். நேற்று எங்கள் நிர்வாகக் குழு கூடி, ஒரு சில கருத்துக்கள், முடிவுகள் எடுத்தோம். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அண்ணா திமுக கூட்டணியில் தொடர என்று முடிவு செய்தோம். அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் முடிவை அறிவித்தோம். அவரும் புரட்சி பாரதம் கட்சியை எந்தவிதத்திலும் கைவிட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

 

இதையடுத்து ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டு, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.தற்போதைக்கு புதிய சின்னத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இரட்டை இலை சின்னத்திலேயே புரட்சி பாரதம் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.

Right Menu Icon