கொரொனாவிலிருந்து தப்பிக்கிறதா இத்தாலி!
A patient in a biocontainment unit is carried on a stretcher from an ambulance arrived at the Columbus Covid 2 Hospital in Rome, Tuesday, March 17, 2020. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness, especially in older adults and people with existing health problems. (AP Photo/Alessandra Tarantino)
இத்தாலியில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரொனாவுக்கு எதிரான விதத்தில் இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. கொரொனா வைரஸ் எத்தனைக் கோரமானது என்பதற்கு சான்றாக ஒரு நாடாக உள்ளது இத்தாலி. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த இத்தாலியில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.
மொத்த பாதிப்பு என பார்த்தால் உலகிலேயே அமெரிக்கா, ஸிபெய்னை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இத்தாலி உள்ளது. எனினும் முதன்முறையாக கொரொனாவுக்கு சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எட்டாயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் கொரொனாவுக்கு எதிரான போரில் இது மிக முக்கியமான மைல்கல் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.
அதேபோல இங்கு முதன் முறையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 20ஆம் தேதி 3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மார்ச் 10ஆம் தேதிக்கு பின் முதன் முறையாக உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் ஊக்கமளிக்கும் தகவல் என அதிகாரிகள் கூறுகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரது சேவைக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. இத்தாலி சரியான பாதையில் செல்கிறது என கூறும் நிபுணர்கள் இரண்டாவது அலை வீசாமல் பார்த்துக் கொள்வது அரசு கவனம் செலுத்தினால் விரைவாக
விரைவில் கொரொனாவை இத்தாலி வெல்லும் என தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தொற்று ஏற்படும் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் நெருக்கடி குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பாதிப்பு குறைந்து வருவதன் எதிரொலியாக மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
முகநூலில் பதிவிட்டுள்ள இத்தாலி பிரதமர் ஊரடங்கு தளர்வுகள் உடனடியாக நடத்தப்பட்டால் கொரொனாவால் மேலும் அதிகரிக்கும் என்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அது சீர்குலைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப் படுவதற்கு முன்பு ஒவ்வொரு மாகாணத்தின் நிலைமையையும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.







