தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்..!
தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அமைச்சரவையில் இணைந்துள்ள நிலையில் 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் ஆளுநர் ரவி உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் அதில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள் புதிய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.





