இந்துவின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்திய இஸ்லாமியர்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து ஒருவரின் இறுதி சடங்கை முஸ்லிம் மக்கள் இணைந்து மேற்கொண்டனர். பெரும் தீமையான கொரொனாவால் விளைந்த சில நன்மைகளால் உண்டான மதத்தை கடந்த மனிதநேயம் வெளிப்பட்டுள்ளது.
ராஜேந்திர குஜராத்தி என்ற 20 வயது இளைஞர் ஜெய்ப்பூரில் உறவினர் வீட்டில் தங்கி தொண்டை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிறு அன்று உயிரிழந்தார். நாடு தழுவிய ஊரடங்கால் அவரது குடும்பத்தினர் எவரும் ஜெய்ப்பூருக்கு வரமுடியாத நிலையில் அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டி அவரது இறுதி சடங்கை மேற்கொண்டனர். ராம நாமத்தை உச்சரித்தவாறே உடலை மயானத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்றனர்.







