--- --:--:-- --

ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டம் உள்ளதா..?

1

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டம் இல்லை என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பல நகரங்களில் இரவு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

மீண்டும் பொதுமக்கள் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் வெளியேறி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ரயில் சேவை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே போர்டு தலைவர் சுமித் சர்மா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் அல்லது வேறு பாதையிலோ நிறுத்தப்படாது எனக் கூறினார்.

 

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ரயில் சேவைகளில் எவ்வித சிரமமும் இல்லை என்றும் தேவைப்பட்டால் கூடுதல் சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

கடந்தாண்டு கொரொனா காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போது பல மாநிலங்களிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon