லஞ்சப்பணம் 5 லட்சம் ரூபாயை தீயிட்டுக் கொளுத்திய தாசில்தார் கைது..!
தெலுங்கானாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து லஞ்சப்பணம் 5 லட்சம் ரூபாயை தீயிட்டுக் கொளுத்திய தாசில்தார் கைது செய்யப்பட்டார். கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் குவாரிக்கு அனுமதி 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் .
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.5 லட்ச ரூபாய் ரசாயனம் தடவிய வீட்டிற்குச் சென்று அவர் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்ல உடனடியாக சமையலறைக்கு சென்று லஞ்ச பணம் முழுவதையும் தீவைத்து எரித்துள்ளார்.
பாதி எரிந்த நிலையில் உள்ள பணத்தை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரை அழைத்து வரும் போது பொதுமக்களும் தாக்க முயன்றனர்.







