கொரோனாவால் கல்லூரிகள் திறக்கப்படுவது தாமதமாகுமா?
கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் தொடக்க கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அது நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படுவது தாமதமாகும் என்று கூறப்படுகிறது. பள்ளிகளைப் பொறுத்தவரை ஜூன் மாதத்திற்கு பிறகு திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளை திறக்கப்படுவது தேர்வுகள் நடத்தப்படுவது தாமதமாகலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







