--- --:--:-- --

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 117 பேருக்கு கொரொனா பாதிப்பு!

APTOPIX Italy Virus Outbreak

A patient in a biocontainment unit is carried on a stretcher from an ambulance arrived at the Columbus Covid 2 Hospital in Rome, Tuesday, March 17, 2020. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness, especially in older adults and people with existing health problems. (AP Photo/Alessandra Tarantino)

இந்தியாவில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 549 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

 

மாநிலங்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 18 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 576 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும், கேரளாவில் 336 பேருக்கும் நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மும்பையில் மட்டும் ஒரே நாளில் 72 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மும்பையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 714 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் 36 பேர் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

புனேவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளது. ஆசியாவிலேயே பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 7 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon