சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு..!
சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலில் அறுபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் இதுவரை 94 ஆயிரத்து 925 கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை தமிழகம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை தமிழ்நாடு முதலீடு மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் எனவும் தொழில் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இருபத்தி ஒரு புதிய திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் . 12 முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.





