--- --:--:-- --

திருவாடானை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்..!

2.1

திருவாடானை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி பால்குட பூக்குழி ஆணி மாத உற்சவ விழாவை முன்னிட்டு கிராமத்தின் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

 

இந்த போட்டியில்பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டி சின்ன கீரமங்கலத்தில் இருந்து துவங்கி மதுரை சாலையில் முப்பையூர் வரை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன சாலையில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்தி சென்ற காட்சி காண சாலையின் இருபுறமும் பொதுமக்கள் குழுமியிருந்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டு உரிமையாளர்களுக்கும் மாட்டு வண்டிகளை ஒட்டிய சாரதிகளுக்கு பணமும், ஆட்டுக்கிடாயும் பரிசாக வழங்கப்பட்டது

Right Menu Icon