பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை..!
மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாடியில் இருந்து மாணவன் ஒருவன் தவறி விழுந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புத்தபட்டியைச் சேர்ந்த கணேஷ் நேற்று பழங்காலத்து மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. சிறுவனுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தங்கள் பிள்ளையின் இந்த நிலைக்கு ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி உறவினர்கள் பழங்காநத்தம் மாநகராட்சி பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்ய வந்த திமுக மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களையும் மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.





