சிறுவனை வெட்ட முயன்ற மற்றொரு சிறுவன்..!
நெல்லையில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை மற்றொரு சிறுவன் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடிப்பதில் சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 16 வயது சிறுவனை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளான். அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு ஓட ஓட சிறுவனை வெட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நடந்து சென்ற மூதாட்டியின் பின்னால் ஒளிந்து சிறுவன் கத்திய நிலையில் மூதாட்டி கீழே சரிந்து காயமடைந்தார்.
இது தொடர்பாக சிறுவனின் மூதாட்டி அளித்த புகாரையடுத்து அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.





