தாலிபான்களுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை..!
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் தாலிபான்கள் உடன் இந்தியா முதன்முறையாக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபான் அமைப்பின் துணைத்தலைவர் முகமது அப்பாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதரகம் வலியுறுத்தியதாகவும் அதற்கு தாலிபான் உத்திரவாதம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை பயங்கரவாத செயல்கள் எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.






