பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி..!
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஜப்பானின் யாமகுச்சியை எதிர்த்து விளையாடிய சிந்து முதல் கேமை 21க்கு 13 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
அனல் பறக்க நடைபெற்ற இரண்டாவது கேமில் இருவருமே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுதாரித்து விளையாடிய சிந்து 22 க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றி வெற்றி பெற்றார். அரையிறுதியில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிடும்.






