இனிமேலும் நடுநிலை சக்தியாக இருக்க முடியாது – கிரிஷ் சோடங்கர்
தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சராக ஸ்டாலின் மீண்டும் வருவார். பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க முதல்முறையாக பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
ஆனால், இனிமேலும் நாங்கள் ஒரு நடுநிலை சக்தியாக இருக்க முடியாது. ஒன்று ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.





