--- --:--:-- --

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்குமா..?

7

நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர்களுடன் நாளை உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

காணொளி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், மாநில தேர்வு வாரிய தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon