இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று..!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய வீரர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் கடந்த 8 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரிஷப் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க சென்றுது தொடர்பான படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து வீரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு செயலாளர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





