--- --:--:-- --

நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசும் சீமான்..!

2

வதூறு பரப்புரைகளில் இருந்தும், மறைமுக அழுத்தங்களில் இருந்து மீண்டுவர நடிகர் விஜய்க்கு துணை நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் கண்டனம் குறித்து சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு செலுத்த வேண்டிய வரிக்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் மீது வசை பாடுவதும் பழிவாங்கும் நோக்கோடு ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது வரி விலக்குக்காக விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தானே தவிர அவர் வரி ஏய்ப்பு செய்து விட்டார் என்பது அல்ல என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அந்த தீர்ப்பு விஜய் வரி ஏய்ப்பு செய்து விட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து வலதுசாரி கும்பல் அவரை குறிவைத்து தாக்குதல் ஏற்படுத்துவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அடக்குமுறைகளை சாடி திரைப்படங்களில் கூறிய கருத்துக்களுக்காக தற்போதைய சூழலை பயன்படுத்தி அவரை பழிவாங்க துடிப்பது என்பது மிகவும் வலுவான அரசியல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon