--- --:--:-- --

சோதனைக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 1000 டோஸ் ரெம்டெசிவர்!

5

கொரொனா நோய் தொற்று சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ரெம்டெசிவர் மருந்து சோதனைக்காக ஆயிரம் டோஸ்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா நோய் தொற்றுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவர் மருந்து நல்ல பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்ததையடுத்து அம்மருந்தை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்தை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ரெம்டெசிவர் மருந்துக்கான காப்புரிமையை அமெரிக்காவை சேர்ந்த கிளியாட்ஸ் சயின்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வரும் இந்திய நிறுவனமே நாட்டில் ரெம்டெசிவர் மருந்தை தயாரிக்க இயலும்.

 

இதற்கிடையில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் ரெம்டெசிவர் மருந்துக்கான மூலப்பொருள்களை கண்டறிந்துள்ளனர்.

 

இருப்பினும் ரெம்டெசிவர் மருந்தை இந்திய சந்தைக்கு கொண்டு வருவது தொடர்பாக அதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ள கிளியாட்ஸ் நிறுவனமே முடிவு செய்யும் என இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியின் தலைமை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon