ரேஷன் கடையில் கைப்பையை முகக்கவசமாக அணிந்த நபர்!
மதுரை மாவட்டம் மேலூரில் பொது வினியோக கடையில் கைப்பையை முக கவசமாக பயன்படுத்திய நபருக்கு பொருட்களோடு அறிவுரையும் வழங்கப்பட்டது. கொரொனா பரவலை தடுக்க வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மிக கட்டாயம் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மேலூரை அடுத்த சந்தைப்பேட்டையில் உள்ள பொது வினியோக கடைக்கு வந்த ஒருவர் முகக் கவசம் அணியாததால் அவருக்கு பொருட்கள் மறுக்கப்பட்டது. இதனால் தான் கொண்டுவந்த கைப்பையை முகத்தை மாற்றிக்கொண்ட அந்த நபர் பொருட்களை வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து கடையில் இருந்த ஊழியர்கள் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிறகு பொருட்களை வழங்கி அனுப்பி வைத்தார்.







